திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நால் ரோடு சந்திப்பில் கடந்த 10 நாட்களாக அங்கமுத்து என்ற 70 வயதுடைய முதியவர் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் உணவின்றி தவித்து வந்துள்ளார். இதை அறிந்த வடுகபாளையத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ரமேஷ் என்பவர் கடந்த 10 நாட்களாக அவருக்கு தினமும் மூன்று வேளை உணவு அளித்து உதவி வந்துள்ளார். இன்று பாஜக நிர்வாகி ரமேஷ் முதியவருக்கு முக சவரம் செய்து, அவரை குளிக்க வைத்து, புதிய துணிகளை வாங்கி கொடுத்து, இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்பட்ட முதியவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மனிதநேயத்தோடு செயல்பட்டு முதியவருக்கு உதவிய பாஜக நிர்வாகி ரமேஷின் இந்த செயல் காண்போரை நெகிழச் செய்தது.