திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரில் அமைந்துள்ள சின்ன குலசை முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இத்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து காளிதேவி, முருகன், அய்யனார், பத்ரகாளி அம்மன் மற்றும் அரக்கர்கள் ஆகிய வேடமணிந்து, அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழாவிற்கு வாகனங்களில் கிளம்பி சென்றனர்.
மன்ன ராஜா சாமி தலைமையில் நடைபெற்ற திருவிழாவில் சின்ன குலசை முத்தாரம்மன் திரு வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.