பெண்கள், ஊனமுற்றோர் முக்கியத்துவம் பல்லடம் DSPயின் நடவடிக்கை

68பார்த்தது
ஊனமுற்றோர் காவல் நிலையம் வந்தால் வீல்சேரில் அமர்ந்து கொண்டு உள்ளே சென்று புகார் அளிக்கும் வசதி
தினசரி மாணவிகளுக்கு காலை மாலை பாதுகாப்புக்கு காலேஜ் மற்றும் பள்ளி முன் போலீஸ் பாதுகாப்பு பிங்க் பேட்ரோல் என புதுவித அறிமுகம்


திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக டிஎஸ்பி ஆக பொறுப்பேற்றிருக்கும் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மகளிர் போலீசார் அனைவருக்கும் பிங்க் பேட்ரோல் என்ற புதுவித ரோந்து பணியை துவக்கி வைத்தார். இன்று முதல் காலை மாலை இரு வேலையும் கல்லூரி பள்ளி முன்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஈவ்டீசிங், காதல் தொல்லை போன்ற பெண்களை பாதிக்கும் வகையில் நடைபெறும் சம்பவங்களை நடக்காமல் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துவக்கி வைத்து இருசக்கர வாகன பேரணியானது நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பல்லடம் சப் டிவிஷனில் உள்ள நான்கு காவல் நிலையத்திற்கும் உடல் ஊனமுற்றோர் புகார் அளிக்க வந்தால் அவர்கள் வீல் சேர் மூலம் உள்ளே சென்று வெளியே வரும் வசதிக்காக பல்லடத்தை சேர்ந்த கொக்கரக்கோ சாமிநாதன் என்பவரின் நன்கொடையில் வீல் சேர்கள் சுமார் 30, 000 மதிப்பில் தற்போது வழங்கப்பட்டது.

டேக்ஸ் :