கோவை வெள்ளியங்கிரியில் பக்தர்கள் மலையேற தமிழ்நாடு அரசு கட்டணம் விதித்துள்ளதாக பரப்பபடும் தகவல் முற்றிலும் திரிக்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "டிரெக் தமிழ்நாடு" திட்டத்தில் கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய ரூ.5,099 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க டிரெக்கிங் சேவை மட்டுமே. ஆன்மீகப் பயணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.