சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்தவர் வினோத் கண்ணன் (வயது 29). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி பல்லடம் அருகில் கரையான் புதூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிவகங்கை சேர்ந்த நிதிஷ்குமார், காளீஸ்வரன், பிரபுதேவா, சாமிநாதன், தங்கமணி, அஜய் தேவன், தங்கராஜ், சுரேஷ், எட்வின்ராஜ், ராஜேஷ் ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சிவகங்கை சேர்ந்த ஆதிஸ்வரன் (30) என்பவரை நேற்று மதுரை சென்று பல்லடம் காவல்துறையினர் கைது செய்தார். அப்போது அவர் தப்பியோட முயன்ற போது தவறி விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.