பல்லடத்தில் செல்போன் வழிப்பறி செய்த மூன்று பேர் கைது

56பார்த்தது
பல்லடம் அருகே உள்ள வெங்கடாபுரம் பஸ் நிறுத்தத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுனில் தீவாரி என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 வாலிபர்கள் அவரை மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பல்லடம் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு இருந்தபோது பைக்கில் வந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் செல்போன் வழிப்பறி செய்த ஊட்டி ரமேஷ் வில்சன், சூலூரைச் சேர்ந்த அலெக்ஸ், அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி