மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி படுகாயம்.
பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கிடாத்துறைபுதூர் பகுதி சேர்ந்தவர் கோவிந்தசாமி 46. தொலைக்காட்சி கேபிள் வயர் பொருத்தும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று அப்பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எச் டி கேபிளில் மின்சாரம் விநியோகிக்க பட்டிருந்தது. இந்தநிலையில் வழக்கம்போல தொலைக்காட்சி கேபிள் வயர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது கேபிள் வயரை எச் டி மின்கம்பத்தில் தவறுதலாக தூக்கி வீசியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் தற்பொழுது அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.