தென்னிந்திய அளவில் கேளோ இந்தியா கோ-கோ போட்டி துவக்கம்

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மல்லேகவுண்டன் பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மத்திய அரசின் சார்பில் செயல்பட்டு வரும் கேளோ இந்தியா திட்டத்தின் கீழ் அஸ்மிதா என்ற பெண்களுக்கான கோ-கோ போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை தமிழ்நாடு கோ-கோ போட்டியின் மாநில செயலாளர் நெல்சன் சாமுவேல் துவங்கி வைத்தார்.

இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 14 வயது முதல் மற்றும் 18 வயது பெண்கள் கலந்து கொண்டனர். 5 சுற்றாக நடைபெறும் இந்த போட்டியில் 180 விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் பெண்களுக்கு மத்திய அரசின் சார்பில் 45 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை மற்றும் கோப்பை வழங்கப்படும்.

மேலும் கோ-கோ விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் கோ-கோ விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிக்கும் காவல்துறை வேலைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :