பல்லடத்தில் மூதாட்டி கொலை நகை பணம் கொள்ளை,

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வசித்து வந்தவர் கண்ணம்மாள்.

இவரது கணவர் சுப்பையன் என்பவர் உயிரிழந்த நிலையில் இவரது இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் திருப்பூர் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். கண்ணம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் அவரை தாக்கி மிளகாய் பொடியை தூவி கை கால்களை கட்டி போட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இன்று காலை கண்ணம்மாளின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் பல்லடம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கண்ணாத்தாளின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகள் களையப்பட்டு இருந்தது எவ்வளவு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது என சம்பவ இடத்தில் பல்லடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் அருகிலேயே அரங்கேரி உள்ள இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி