பல்லடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடமுயன்ற வாலிபர் கைது

65பார்த்தது
பல்லடம் மங்கலம் ரோடு குமரன் வீதியைச் சேர்ந்த சகாப்தீன் என்பவரது மகன் அலாமான்(40). இவர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இது குறித்து பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலியபெருமாள் (25) என்பதும் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரிய வந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி