காங்கேயம் - Kangeyam

உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதே அரசுக்கு முக்கியம் - தமிழிசை

காங்கேயம் தொட்டி பாளையத்தில் பாஜக தொகுதி சார்பில் வடக்கு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். கூட்டமானது மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயிண்ட் மணி, ஒன்றிய தலைவர் கிரிஷ்ணமுர்த்தி, நகர தலைவர் சிவ பிரகாஷ், ஒன்றிய துணை தலைவர் குமார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது: அண்ணன் திருமாவளவன் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு மாநாடு நடத்தப் போகிறேன் என்றார். எங்கு பார்த்தாலும் போதை தலைவிரித்து ஆடிக் கொண்டுள்ளது. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். பள்ளியில் வகுப்பு ஆசிரியர் மாணவியை போதைப் பொருட்கள் பயன்படுத்த அழைக்கின்றார். எப்படி போதை எல்லோரையும் பாதித்துக் கொண்டுள்ளதோ அதேபோல் நாய்களின் தொந்தரவு மிக அதிகமாக இருக்கிறது. நாய்களினால் ஆடுகள் கடிக்கப்பட்டு இறக்கின்றது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்கள் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது பற்றி சிந்தித்துக் கொண்டுள்ளனர் என்றார்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా