காங்கேயம் கம்பளியம் பட்டியில் கோயில் மகா கும்பாபிஷேக விழா

65பார்த்தது
காங்கேயம் அடுத்த கம்பளியம் பட்டியில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சப்த கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ முனியப்ப சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று(செப்.16) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழா பூஜைகள் நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி குபேர ஹோமம், ஸ்ரீ அஸ்த்ர ஹோமம், பூர்ணாஹீதி, தீபாரனை நடைபெற்றது.

பின்னர் மாலை 4 மணிக்கு மங்கல இசையுடன் முளைப்பாரி எடுத்துவரப்பட்டு, ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு மங்கள இசை உடன் 2ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் விமான கோபுரம் மகா கும்பாபிஷேகம் மகா தீபாரதனையுடன் நடைபெற்றது.

அதன் பின்னர் ஸ்ரீ சப்த கன்னிமார் அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவில், ஸ்ரீ முனியப்ப சுவாமி திருக்கோயில் கோபுரம் மூலவர் மகா கும்பாபிஷேகம் மகா தீபாராதனையும் நடைபெற்றது. திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு காசி, குற்றாலம், ராமேஸ்வரம், கொடுமுடி, பவானி, திருச்செந்தூர், அமராவதி, மடவிளாகம் ஆகிய பகுதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி