திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காவல்துறையினர் கடைவீதி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கச்சேரி வலசு அருகில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கோகுல்(24) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர் வெளி மாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்களை எழுதி துண்டு சீட்டை ரூ 50 க்கு விற்பனை செய்து வந்ததும் குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்ததும் தெரிய வந்தது.