காங்கேயம் காடையூரில் உள்ள பசுவன்மூப்பன்வலசு பகுதியில் நாடார் மக்களுக்கு சொந்தமான குலதெய்வம் கோவிலை மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் வழிபட இடையூறு செய்வதாகவும் குற்றம் சாட்டி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிரசன்ன ஸ்ரீ கருங்குட கருப்பணசாமி மற்றும் ஸ்ரீ காணியாள சுவாமி கோவில்கள் மாற்று சமூகத்தின் தோட்டத்திற்கு உள்ளது. சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் அவர்களிடம் தோட்டத்தின் கேட் சாவியை வாங்கி செல்ல வேண்டியுள்ளதாகவும், கோவில் இடத்தை மீட்டுத் தரவும் தாங்கள் வழிபாடு செய்ய வேண்டிய 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் மாலை 3 மணி முதல் இரவு வரை எங்கள் சமுதாய பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தோம் ஆனால் வட்டாச்சியர் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஓரிரு நாளில் தோட்டத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படும் என கூறப்பட்டதை தொடர்ந்து போராட்டம் இரவு 10மணி முடித்து வைக்கப்பட்டது.