உடுமலை நகராட்சியில் குப்பை தரம் பிரிக்க விழிப்புணர்வு தேவை
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் சென்று தொழிலாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நிலையில் தற்பொழுது பொது இடங்களில் கழிவுகளை கொட்டும் வழக்கமும் தொடர்ந்து வருகின்றது. இதனால் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறியே ஆவதோடு சுகாதார சீர்கேடு மேற்படுகின்றது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைத் தரம் பிரிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர.