திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் மூங்கில்தொழுவு, சோமவாரபட்டி பகுதியில் ஆல் கொண்டமால் திருக்கோவில் மற்றும் சோமவாரபட்டி பகுதியில் ரூ. 3 கோடி 04 லட்சம் 18 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் அவர்களும், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ச. கிரி மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.