திருப்பூர் தாராபுரம் வழியாக கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக முன்னாள் முதலமைச்சரும், உரிமைமீட்பு குழு தலைவருமான ஓ பன்னீர்செல்வம் வருகை தர உள்ளார் என்பதை அறிந்த திருப்பூர் கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் டி டி காமராஜ் தலைமையில், அவர்கள் சார்ந்த கட்சியினர் தாராபுரம் பைபாஸ் சாலை பிரபல ஹோட்டல் அருகே காத்திருந்து அவ்வழியாக வந்த உரிமை மீட்பு குழு தலைவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு மாலைகள் அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர், தொடர்ந்து தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வத்திற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறி கோஷமிட்டனர்.