தாராபுரம் பொன்னிவாடி கிராமம் எலுகாம்வலசில் எழுந்து அருள்பாலிக்கும். ஸ்ரீ அருள்மிகு செல்வ கணபதி, ஸ்ரீ மஹா மாரியம்மன், ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி. ஸ்ரீ கன்னிமார் சுவாமிகள் ஆகிய 5, ந்து தெய்வங்களுக்கு
ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. இந்த விழாவானது 150, ஆண்டுகள் பழமையான வரலாற்று புகழ் பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் புனராவர்த்தன ஆலய மகா கும்பாபிஷேக விழா 40. ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியுடன் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து காசி, திருச்செந்தூர், காவிரி, அமராவதி, திருமூர்த்தி மலை உட்பட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அருள்பாலிக்கும். ஸ்ரீ அருள்மிகு செல்வ கணபதி, ஸ்ரீ மஹா மாரியம்மன், ஸ்ரீ ஆகிய பரிபார தெய்வங்களுக்கு முதலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.