நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக நாதக-வுடன் தொடர்ந்த பயணம் தற்போது முடிவடைகிறது என்பதை எண்ணி வருத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் என்னுடைய பயணம் தொடரும் என கூறியுள்ளதால், தமிழ்த்தேசியத்தை கொள்கையாக கொண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.