உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மோருடன் இஞ்சி சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. சிறிதளவு தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு இஞ்சி துண்டை நறுக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இதனுடன் சீரகப் பொடி கலந்து குடிக்கலாம். இதை தொடர்ந்து குடித்து வந்தால் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்புகள் கரையும். உடல் எடை குறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும்.