நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தன்னுடன் இத்தனை ஆண்டுகள் களத்தில் நின்று பணியாற்றிய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் எந்த காரணத்திற்காக கட்சியில் இருந்து விலகுகிறார் என்றும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரும் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.