மணப்பாறை: கிணற்று நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் இளைஞர் சரவண குமார் (வயது 21). சம்பவம் நடந்த நேற்று முன்தினம்(அக்.4) வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை அவருடைய உடல் சடலமாக வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் இருப்பதாக அவருடைய தாய் அளித்த புகாரின் பேரில் தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு மணப்பாறை காவல்துறையினிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைக்காக சரவணகுமாரின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.