விமான நிலையத்தில் ஆட்டோக்களை அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் உள்ளே பயணிகள் ஆட்டோ செல்ல விமான நிலைய நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அனைத்து ஆட்டோ
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் பொது நல கூட்டமைப்பின் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோ நுழைவதை தடை செய்யும் கார்ப்பரேட் நவீன தீண்டாமையை கண்டித்து ஆட்டோவை உள்ள அனுமதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்ட உரையை பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சரவணன், முருகேசன், மணிகண்டன், விக்கி, ரவிக்குமார், சம்சுதீன், பஷீர், காசிம், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கண்டன உரை ஆற்றினர். தொடர்ந்து விமான நிலையத்திற்கு உள்ளே ஆட்டோக்கள் செல்ல அனுமதிக்க மறுத்ததால் விமான நிலையத்திற்கு உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும், காத்திருப்பு போராட்டம் மற்றும் பட்டினி போராட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி