திருச்சி மாநகர இந்திரா ஃபெல்லோஷிப் இயக்கத்தின் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் அருணாச்சலம் மன்றத்தில் இன்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் தலைமையில், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி முன்னிலையில்
நடைபெற்றது.
இந்திரா ஃபெல்லோஷிப் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயந்திதியாகராஜன் ஆலோசனை வழங்கினார்.
இதில் இந்திரா தோழிகள் பிரியங்காபட்டேல், ரூபா சிவக்குமார், மாரீஸ்வரிராமன் மற்றும் வின்சி, சியாமளா தேவி, வாசுகி, ரம்யா தேவி, சுமதி, ஜெயம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திரா ஃபெல்லோஷிப் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயந்திதியாகராஜன்,
தேசிய இளைஞர் காங்கிரஸ் பெண்களுக்கான சக்தி இயக்கத்தை
இந்திரா ஃபெல்லோஷிப் மூலம் அறிமுகப்படுத்தியது. இது பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திரா பெல்லோஷிப் அறிமுகப்படுத்தி ஒரு வருடம் வெற்றிகரமாக முடித்ததை அடுத்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இந்த திட்டத்தை மறு அறிமுகம் செய்து வைத்து கல்லூரி மாணவிகள், புராஃபஷனல் பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் அரசியலில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் என தெரிவித்தார்