பிரிட்டனில் கார்டிஃப் நகரில் பெண் ஒருவரின் வீட்டில் திருடுவதற்காக டாமியன் வோஜ்னிலோவிச் (36) என்ற திருடன் நுழைந்துள்ளார். அப்போது டாமியன், வீட்டில் இருந்த குப்பைகளை கூட்டி, அழுக்கு துணிகளை துவைத்து காய வைத்துவிட்டு, உணவு சமைத்துள்ளார். அதன்பின், வீட்டை விட்டு வரும்போது, 'டோன்ட் வொரி, பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்' என்று எழுதி வைத்துவிட்டும் வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, மற்றொரு வீட்டில் இதேபோல் திருடும்போது டாமியன் பிடிபட்டுள்ளார்.