புளி சாப்பிடுவதால் நமது உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. புளியில் அதிக அளவு உள்ள ஆன்டி - ஆக்ஸ்டன்ட்கள் புற்றுநோயை தடுக்கும் திறன் கொண்டவை. இவை நம் உடலில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க பெரிதும் உதவும். புளியை உட்கொள்வது இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்கின்றனர் நிபுணர்கள். புளியை தினமும் உட்கொள்வது சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் பல பண்புகள் புளியில் உள்ளன.