திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடம் சிக்கிய துப்பாக்கி தோட்டா

60பார்த்தது
திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடம் சிக்கிய துப்பாக்கி தோட்டா
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று சனிக்கிழமை அதிகாலை 3.10 மணிக்கு இலங்கைக்கு செல்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடமையில் துப்பாக்கித் தோட்டா ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கனடா நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் டொனால்ட் வில்சன் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை ஏர்போர்ட் காவல் நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி