மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனக்குன்றம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயாலயன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது கர்ணன் என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 170 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.