கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவிக்கும், அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களான நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடலாம் என மாணவன் அழைத்த நிலையில் மாணவியும் சென்றுள்ளார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மாணவியை, அந்த மாணவர் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவர் கைது செய்யப்பட்டார்.