திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே நில புரோக்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சாமிதுரை (21), ஹரிஹரன் (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எந்த காரணத்திற்காக வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசினார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.