சமயபுரம் அருகே நகை-பணத்தை திருடிய மர்ம நபருக்கு வலைவீச்சு

சமயபுரத்தை அடுத்த மேளவாளாடி அருகே உள்ள புதுக்குடி ஊராட்சி காந்திநகர், கே.என்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரோலிங்டன். இவரது மனைவி யாஸ்மின்பேகம் (வயது 23). இவர்களுக்கு ஹாஜிரா (3) என்ற மகள் உள்ளார். ரோலிங்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், யாஸ்மின்பேகம் புள்ளம்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கேட் மற்றும் உள்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 4 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் பிரியாணி சமைக்கும் பெரிய அண்டா ஆகியவை திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.