ஓலா ஸ்கூட்டருக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி.. இன்றே கடைசி
இந்தியாவின் மிகப்பெரிய பிரத்தியேக EV நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் விழாக்கால சீசனையொட்டி மிகப்பெரிய ஓலா சீசன் சேல் திட்டமான BOSS சலுகைகளின் ஒரு அங்கமாக ஒரு "72 மணிநேர ரஷ்" அறிவித்துள்ளது. அதன்படி ஓலா S1 பிரிவில் உள்ள ஸ்கூட்டர்களுக்கு ரூ.25,000 வரையிலான தள்ளுபடிகள் மற்றும் ரூ.30,000 வரையிலான கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. இந்த ஸ்கூட்டரின் தொடக்க விலையாக ரூ.74,999-ஐ நிர்ணயம் செய்துள்ளனர். இந்த ஆஃபர் இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.