இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) சென்னை, ஹெர்பலைஃப் என்ற உடல்நலம் மற்றும் ஆரோக்கிய நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில், டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்களில் ஐ.ஐ.டி மெட்ராஸ் பி.எஸ் பட்டப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு 1,000 ஸ்காலர்ஷிப்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது, பின்தங்கிய மாணவர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 50% உதவித்தொகைகள் பெண் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.