தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாண வைபவம் கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. நேற்று (அக்.29) இரவு பூம்பல்லாக்கில் அம்பாள் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று (அக்.30) இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் பாகம்பரியால் சங்கர ராமேஸ்வரருக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிவன் கோயில் தலைமை பட்டர் செல்வம், சண்முகம் பட்டர் ஆகியோர் சிறப்பு தீபாராதனை செய்தனர். திருக்கல்யாணத்தை நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் அமர்ந்து கண்டுகளித்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.