ஸ்மார்ட் டிவியை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் தொலைக்காட்சி பழுதடையும் வாய்ப்பு உள்ளது. சுத்தம் செய்யும் முன் எப்போதும் டிவியை ஆஃப் செய்து மின் இணைப்பை துண்டிக்கவும். ஸ்மார்ட் டிவி திரையை உங்கள் பலத்தை பிரயோகித்து கடினமாக தேய்க்க வேண்டாம், மென்மையாக சுத்தம் செய்ய வேண்டும். திரையை சுத்தம் செய்ய மென்மையான மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்தவும். துணியை சிறிது ஈரப்படுத்தினாலும் அதிக ஈரமாக இருக்கக்கூடாது.