கேதாரம் எனும் இடத்தில் இறைவனை வேண்டி 21 நாள் தவம் இருந்தாள் அம்பிகை. தவத்தால் மகிழ்ந்த இறைவன் தனது இடப்பாகத்தில் தேவிக்கு இடமளித்தார். இதுவே கேதார கௌரியின் வரலாறு. இந்த நாளில் பூரண கும்பம் வைத்து கலசம் பாலித்து 21 முடிச்சுகள் கொண்ட நோன்பு கயிறை வைத்து பூஜிக்க வேண்டும். வெண்தாமரை மலர்கள் வைப்பது சிறப்பு. 21 நாட்கள் தவமிருந்து வரம் பெற்றதன் நினைவாக 21 வெற்றிலை பாக்கு, 21 முறுக்கு என அனைத்தையும் 21 எண்ணிக்கையில் படைத்து வழிபட வேண்டும்.