2023ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதோடு கடந்த 29 ஆண்டுகளிலேயே அது மிக அதிகமான எண்ணிக்கை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலேயே பாதிப்பு அதிகம் உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் உலக அளவில் 75 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 2023-ஆம் ஆண்டு 80 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.