அமெரிக்காவைச் சேர்ந்த டப்டஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பிஸ்தாவை உண்பது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. பிஸ்தாவில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகிய நுண்துகள்கள் கண் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கூறப்படுகிறது. முட்டையை விட பிஸ்தா நன்மை தருவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து 12 வாரங்கள் 57 கிராம் பிஸ்தா சாப்பிடுபவர்களுக்கு விழித்திரை ஆரோக்கியம் மேம்படுவது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.