டென்மார்க்கை சேர்ந்த நிறுவனம் புது வகையான இன்சுலினை கண்டறிந்துள்ளது. இதற்கு NNC 2215 என பெயரிடப்பட்டுள்ளது. இதை உடலுக்குள் செலுத்திக் கொண்டால் போதும். நேரடியாக ரத்தத்தில் கலக்காது. எப்போது சர்க்கரை அளவு அதிகரிக்கிறதோ அப்போது மட்டுமே உடலில் கலக்கும். மற்ற நேரங்களில் உடலிலேயே தங்கியிருக்கும். எலிகள், பன்றிகள் மீது சோதனை நடத்தியதில் இன்சுலின் நன்றாக வேலை செய்துள்ளது. விரைவில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.