உலகில் வாழும் மூன்றாவது பெரிய பாலூட்டி விலங்கு நீர் யானை. இதன் சராசரி எடை 1500 கிலோ ஆகும். 6 அடி உயரம் மற்றும் 15 அடி நீளம் கொண்டது. இதன் ஆயுட்காலம் 40 - 50 ஆண்டுகள் ஆகும். ஆப்பிரிக்க கண்டத்தில் நீர்யானைகள் அதிகம் வாழ்கின்றன. இவை நீருக்குள் இருந்தபடியே சுவாசிக்கும். தூங்கும். அதன் பகுதிக்குள் நுழைப்பவரை மூர்க்கத்தனமாக தாக்கும். மிக ஆபத்தான விலங்கான நீர்யானையை மற்ற விலங்குகள் நெருங்குவதற்கு கூட விரும்புவதில்லை.