தீபாவளி தினமான இன்று (அக். 31) சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்தது. அதன்படி குரோம்பேட்டை, பல்லாவரம், பொழிச்சலூர், சேலையூர், மதுரவாயல், கோயம்பேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. பல்லாவரம் பகுதியில் சில மணி நேரம் பெய்த மழையிலேயே பல இடங்களில் தண்ணீர் குளம் போல தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானதை காண முடிந்தது.