கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தபஷ்யா. இவரது தந்தை கோட்டக்கல் பகுதியில் நகைத்தொழில் செய்து வருகிறார். சிறுமிக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டதால், கிரிக்கெட் பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது சிறுமி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டபோது, பந்து தலையில் பட்டுள்ளது. இதில், பலத்த காயம் அடைந்த சிறுமி தபஷ்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.