தீபாவளி பண்டிகை தினமான இன்று (அக். 31) தமிழ்நாட்டில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் காலையிலேயே கள்ளச்சந்தையில் மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணிக்கு தான் திறக்க வேண்டும். ஆனால் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மது விற்பனை நடந்து வருகிறது. மதுக்கடையில் உள்ள பார்களில் கூடுதல் விலைக்கு மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதை காண முடிகின்றது.