இன்று (அக்.31) தீபாவளி தினத்தில் தமிழகம் முழுவதும் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் 5 பேரும், திருச்சியில் 3 பேரும் தீக்காயம் அடைந்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் சிறிய தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூரில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.