தூத்துக்குடி தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு மல்லிகைப்பூ கிலோ 1500 ரூபாய் வரையும் பிச்சிப்பூ கிலோ 1200 ரூபாய் வரையும் ரோஜாப்பூ வகைகள் 20 ரூபா வரை விற்பனை
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது இதை தொடர்ந்து தூத்துக்குடி பூச்சந்தைக்கு பேரூரணி, ஓசன் ஊத்து, அல்லிக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை கொண்டு வந்தனர் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் பூச்சந்தையில் அலைமோதியது
இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது நேற்று ஆயிரம் ரூபாய் விற்பனையான மல்லிகை பூ இன்று ஒரு கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனையானது பிச்சிப்பூ கிலோ 1200 ரூபாய் வரையும் விற்பனையானது
தீபாவளி பண்டிகைக்காக ஊட்டி கொடைக்கானல் ஓசூர் பெங்களூர் ஆகிய பகுதியிலிருந்து 10 வண்ணங்களில் ரோஜா பூக்கள் வரவழைக்கப்பட்டு ரோஜா பூக்கள் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மேலும் செண்டு பூ கிலோ 80 ரூபாய் வரையும் பச்சை கிலோ 50 ரூபாய் வரையும் விற்பனையானது பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்