தூத்துக்குடி: சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை
தூத்துக்குடி சிதம்பரம் நகர் சிதம்பர விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தேவி சன்னதியில், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று (அக்.,11) காலை சரஸ்வதி தேவிக்கு பால் தயிர் பன்னீர் விபூதி சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து சரஸ்வதி தேவிக்கு வெண் பட்டால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி தேவியை வழிபட்டு சென்றனர்.