தூத்துக்குடி: ஆன்லைன் ரம்மி விளையாடிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் அருண்குமார் வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார் இதில் பணத்தையும் தொடர்ந்து இழந்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20 ஆயிரம் இழந்ததாக கூறப்படுகிறது இதனால் மனம் உடைந்து அருண்குமார் இருந்துள்ளார் இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிய பின்பு வீட்டில் மேற்கூறையில் இருந்த கொக்கியில் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதைத்தொடர்ந்து இரவில் அவரது மனைவி மற்றும் அருகில் இருந்தவர்கள் உடலை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அருண்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அருண்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.