ஓட்டப்பிடாரம் - Ottapidaram

தூத்துக்குடி: மாட்டுவண்டி போட்டி; சீறிப்பாய்ந்த காளைகள்

தூத்துக்குடி அருகே தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம்: 100 மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்பு: போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன தூத்துக்குடியை அடுத்துள்ள டேவிஸ் புரம் பகுதியில் தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. நடு மாட்டு வண்டிகள் சின்ன மாட்டுவண்டிகள் பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் தேனி சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதைத் தொடர்ந்து டேவிஸ் புரம் பகுதியில் இருந்து துவங்கியது. இந்த மாட்டு வண்டி போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றன. நடு மாட்டு வண்டி போட்டிக்கு 8 கிலோமீட்டர் தூரமும் சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு 6 கிலோமீட்டர் தூரமும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டிக்கு 5 கிலோமீட்டர் தூரம் போட்டிகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி போட்டியை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலைகளில் இருபுறங்களில் நின்று போட்டிகளை ரசித்தனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా