தந்தைக்கு ரூ.1.5 கோடியில் கோயில் கட்டும் மகன்

80பார்த்தது
தந்தைக்கு ரூ.1.5 கோடியில் கோயில் கட்டும் மகன்
சென்னை போரூர் அருகே ஐயப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பெரியநாயகம். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது நினைவாக மகன் லாரன்ஸ் பெரியநாயகம், ஐயப்பந்தாங்கல் ஊராட்சி பகுதியில், சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்ட கோயில் ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று (நவ.2) அவரது தந்தையின் 60வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார். அவரது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி