அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் இன்று (நவ. 03) நடைபெற்றது. இதில் இபிஎஸ் பேசும் போது, “திமுகவிற்காக மு.க. ஸ்டாலின் 20 ஆண்டுகள் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது. உதயநிதி என்ன சாதனை செய்தார்? அவருக்கு ஏன் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது? உதயநிதி மட்டும் தான் கட்சிக்காக உழைத்தாரா? மற்றவர்கள் உழைக்கவில்லையா” என கேள்வியெழுப்பினார்.